May 23, 2010

மத்துகம தொடங்கொடை பிரதேசத்தில் நடக்கும் மர்மம் என்ன?திரைமறைவில் செயற்படுபவர்கள் யார்?கடந்த சில வாரங்களாக தொடங்கொடையில் புனித இஸ்லாத்தை தழுவிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இஸ்லாமிய அடிப்படை கல்வி வகுப்புக்கள் நடைபெற்று வந்தன. அதன் பெறுபேறாக மேலும் இரண்டு குடும்பங்கள் (ஏழு பேர்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். TNTJ இலங்கைக் கிளையினால் இந்த வகுப்புகள் நடாத்தப்படுகின்றது என்ற செய்தியை கேள்வியுற்ற களுத்துரை மஸ்ஜிதுத் தக்வா நிர்வாகிகள் (தௌஹீத்வாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள்) எம்மை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “தாங்கள் ஷபாப் அமைப்புடன் சேர்ந்து தொடங்கொடையில் இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்காக நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதால் TNTJ யினர் அங்கு சென்று தஃவா செய்ய வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தனர். “குர்ஆன், சுன்னாவில் அதற்கு தடை இல்லாதபோது ஸலாம் சொன்னால் பதில் ஸலாம் கூட சொல்லத் தெரியாத அந்த மக்களுக்கு தஃவா செய்வதை நாம் நிறுத்தப்போவதில்லை” என கண்டிப்பாகத் தெரிவித்தோம்.


பின்னர் ஷபாப் அமைப்பின் முக்கிய நிர்வாகியான லப(f)ர் என்பவர் எம்மை தொடர்புகொண்டு “ஏற்கனவே ஷபாப் பல நிகழ்ச்சிகளை நடாத்திக்கொண்டு வருகையில் அங்கு போய் தஃவா செய்தால் குழப்பம் ஏற்படும்” என்று தெரிவித்தார். “அப்படியாயின் குழப்பம் எந்தெந்த விடயங்களில், எவ்வகையில் ஏற்படும் என்பதை நாம் இரு சாராரும் அமர்ந்து பேசி முடிவெடுப்போமா?” எனக் கேட்டபோது, “பார்ப்போம்” எனக் கூறிவிட்டு phழநெனை துண்டித்துவிட்டார்.இஸ்லாத்திற்கு வந்த அந்த மக்களுக்கு மஸ்ஜிதுத் தக்வாவும், ஜம்இய்யது ஷபாவும் சேர்ந்து இதுவரைக்கும் ஒரு கிணறு கட்டிக்கொடுத்தள்ளனர். அத்துடன் கடந்த றமழானில் முப்பது நாட்களும் அந்த மக்களுக்கு கஞ்சி தருவதாக வாக்களித்து விட்டு பதினைந்து நாட்கள் கஞ்சி கொடுத்துவிட்டு மீதி நாட்களில் transportஇல்லை என கைவிரித்தது மற்றும் இரு மாதங்களிற்கு முன் ஒரு நாள் நிகழ்ச்சி என்ற பெயரில் ஓரிரு பயான்களை நடாத்திவிட்டு பகல் போசனமும் வழங்கியமையே இவர்கள் செய்த மாபெரும் தஃவா நிகழ்ச்சிகளாகும். இந்த கொஞ்ச நஞ்சம் கூட தமது சொந்தப் பணத்தில் செய்யவில்லை. வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து வந்த அரபுப் பணத்தினாலே செய்யப்பட்டன. வந்தது எவ்வளவு, சென்றது எவ்வளவு என்ற உண்மைக் கணக்கை அல்லாஹ் ஒருவனே அறிவான்.இந்த இலட்சணத்தில் நடைபெறும் இவர்களின் தஃவாவைக் கேள்வியுற்றபோதுதான் வுழூ செய்யத் தெரியாத, நபிவழியில் தொழுகை முறையை அறியாத அந்த மக்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வகுப்பைத் தொடராக நடாத்துவதன் அவசியத்தை உணர்ந்த நாம் அதைத் தொடராக நடத்தி வந்தோம். இன்னும் இஸ்லாத்திற்குள் நுழையாத பல மாற்று மத சகோதர, சகோதரிகளும் அந்த வகுப்பில் கலந்து கொண்டு கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற்று வந்தனர். இவ்வாறு வெற்றிகரமாக தஃவா முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் இதுவரை காலமும் ஏறெடுத்துப் பார்க்காத அந்த ஊரிலுள்ள கோயில் நிர்வாகிகள் எமது வகுப்புகளை நடாத்த வேண்டாம் எனக் கூறி தடை ஏற்படுத்த முற்பட்டனர். தற்போது கோயிலுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளதால் கோயில் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வழங்கப்படும் அரிசி, பருப்பிற்காகவும் (ஷபாப் அமைப்பினாலும், மஸ்ஜிதுத் தக்வாவிலும் வழங்கப்படும்) தான் மக்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள் என்றும் கூறினார்கள். எனினும், இஸ்லாத்தைத் தழுவிய அந்த மக்கள் வகுப்பை நடாத்துவதில் உறுதியாக இருந்தனர். ஏதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகளுக்கும் எமக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்கபாடாகியது. அதில் “கோயில் நிர்வாகத்தாலும் அரிசி, பருப்பை அதிகமாக வழங்குங்கள். அரிசி, பருப்பிற்காக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் மீண்டும் பழையபடி உங்களுடன் வந்துவிடுவார்கள். ஒரு கடவுளை மட்டும் ஏற்று இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அதில் உறுதியாக இருப்பார்கள்” என்று தெளிவாகக் கூறிவிட்டோம். மேலும், அந்தக் கூட்டத்தில் இரண்டு தெரிவுகளை அவர்களுக்கு முன் வைத்தோம்.(1) இந்த வகுப்பை நடாத்துவது எமது ஜனநாயக உரிமை. இதை யாரும் தடுக்க முற்பட்டால் அதை சட்டரீதியாக எதிர் கொள்வது.

அல்லது(2) ஓர் இறைக் கொள்கையை கொண்ட இஸ்லாம் மார்க்கமா அல்லது பல கடவுட் கொள்கையைக் கொண்ட இந்து மார்க்கமா மனித குலத்தின் நேர்வழிக்கு சிறந்த வழி என்று இரண்டு தரப்பினரும் அமர்ந்து கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வருவது.மேற்கூறிய இரு தெரிவுகளை அவர்களுக்கு முன் வைத்து ஒரு வாரத்திற்குள் call பண்ணுமாறு கூறிவிட்டு வந்தோம். ஒரு வாரத்திற்குள் அவர்களிடமிருந்து அழைப்பேதும் வராததால் மீண்டும் call பண்ணி ஞாபகப்படுத்தினோம். ஆனால், அந்த கோயில் நிர்வாகிகள் இது சம்பந்தமாக எங்களை தொடர்பு கொள்ளாமல் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர் நசார் என்பவரின் வீட்டை, பக்கத்து ஊரைச் சேர்ந்த ரௌடிகளை ஏவி உடைத்துள்ளார்கள்.தற்சமயம் TNTJ யின் இந்த தஃவாவிற்கு களுத்துரையைச் சேர்ந்த கொள்கை சகோதரர்கள் சிலர் பூரண ஒத்துழைப்பு தந்து வருவதுடன் தொடர்ந்தும் அங்கு இஸ்லாம் வகுப்புகளை நடாத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.கவலைக்குரிய விடயம் என்னவென்றால்,

மாற்று மதத்தவர்களுக்கு அழைப்புப் பணியை மேற்கொள்வதாகக் கூறி இலட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி டாக்டர். ஸரகிர் நாயக் அவர்களை அழைத்து தஃவா நிகழ்ச்சி நடாத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் ஜம்இய்யது ஷபாப் இயக்கத்தின் பூரண அனுசரனையில் இயங்கும் களுத்துரை மஸ்ஜிதுத் தக்வா நிர்வாகிகளே மாற்று மதத்தவர்களை தூண்டி இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், TNTJ யினரை வைத்து தொடர்ந்தும் தொடங்கமையில் வகுப்புகளை நடாத்தினால் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் யாரேனும் மரணித்தால் களுத்துரை மையவாடியில் அடக்குவதற்கு இடம் தரமாட்டோம் எனக் கூறி தாம் தௌஹீத்வாதிகள் அல்ல ஜாஹிலியாவாதிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.செயலாளர்,

M.S.M.RiyasdeenTNTJ-இலங்கைக் கிளைNo comments: