July 28, 2010

உம்மி நபியை மாமேதையாக்கியது எது?  பகுதி 01
பாத்திமா ஷஹானா கொழும்பு.

அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.                 (அல்குர்ஆன் 7:158)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் அதாவது உம்மி நபி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலியாக் காலத்திலேயே பிறந்தார்கள்.

ஜாஹிலியாக் காலம் என்பது அறியாமைக் காலம். மக்கள் படிப்பறிவில்லாமல் நாகரீகமற்று மூட நம்பிக்கையால் மூழ்கியிருந்த காலம். பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த காலம். இப்படிப் பட்ட கொடூர குணம் கொண்ட மக்கா நகர அரபிகள் மத்தியில் தான் நபியவாகளின் இளமைக் காலம் இருந்த்து.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் 'அல் அன்ஆம்' (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகியும்விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140)    (புஹாரி 3524)

இவர்களிடத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் சிலை வணக்கம் உட்பட விபச்சாரம்இ மது அருந்துதல்இ கொலைஇ கொள்ளைஇ சூதாட்டம்இ வட்டி இன்னும் பல பாவச் செயல்கள் குடிகொண்டிருந்தன. மனிதர்கள் மாக்களாக உலா வந்து கொண்டிருந்த காலம். அரேபியா முழுவதும் அறியாமை எனும் இருள் சூழ்ந்த காலம்.

இக்காலகட்டத்திலேயே முஹம்மதென்னும் ஒளி அரபு தேசத்தில் உண்டாயிற்று பிறக்கும் முன் தன் தந்தையையும்இ பிறந்து ஆறு வருடத்தில் தன் தாயையும் இழந்த நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.

இயற்கையிலேயே ஒரு மனிதனது சூழல் அவனது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் படிஇ ஒரு மனிதனது வாழ்க்கை அவனது பெற்றோர்இ குடும்பம்இ சுற்றுப்புறச்சூழல்இ வருமானம் ஆகிய நிலைகளைக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் அவனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறு பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெற்றோரின் அரவணைப்பு அவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைத்திருக்கும். தந்தையின் அரவணைப்பு அறவே கிடைக்கவில்லை.

உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?
(அல்குர்ஆன் 93:6)

அவர்களது சுற்றுப்புறச்சூழல் கூட பெரிதாக மதிக்கத்தக்க அளவில் இருந்ததில்லை. குடும்ப சூழ்நிலையும் பெரும்பாலாக அல்லாஹ்விற்கு இணை வைக்கும் நபர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்வனைத்து மோசமான நிகழ்வுகளுக்கு மத்தியில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்திலிருந்து நல்ல பண்புகளோடுஇ சிறந்த ஒழுக்க விழுமியங்களோடு நம்பிக்கையும்இ நாணயமும் உடையவராக காணப்பட்டனர்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
(அல்குர்ஆன் 68:4)


முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அவர்களது சுற்றுப்புறச் சூழல் அவர்களது நடத்தையில் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணத்தை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான   செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:159)

அல்லாஹ்வின் பேரருள் அவர்களுக்கு இருந்தமையினால் அவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டார்கள்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும் அன்பும் உம் மீது இல்லாதிருந் தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.
 (அல்குர்ஆன் 4:113)

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்த வராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர். (42:52)

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.
(93:7)

மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்வே முஹம்மது நபி (ஸல்) அவர்களிற்கு அனைத்து கல்வி ஞானங்களையும் கற்று தந்ததாகவும்இ வழிகெட்ட அந்த ஜாஹிலிய மக்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதாகவும்இ நேர்வழி காட்டியதாகவும் குறிப்பிடுகின்றான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் வஹீ ஜிப்ரீல் (அலை) அவர்களினூடாக அறிவிக்கப்படுவதன் மூலம் அல்லாஹ் ஒரு மனிதனது சீரான வாழ்க்கைக்கான அனைத்து வழிமுறைகளையும்இ சட்டதிட்டங்களையும் அறிவித்தான்.

வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 42:51)

எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால்இ வழிகாட்டுதலால் அவன் வழங்கிய கல்வி ஞானத்தால் ஒரு பேரரசையே நிர்வகிககும் அளவிற்கு ஆளானார்கள்.

ஜாஹிலிய மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர அயராது முயற்சி செய்தார்கள். அல்லாஹ்வே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் முன்மாதிரி உள்ளதாகக் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.  (அல்குர்ஆன் 33:21)

எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் பிற்காலத்தில் உலகையே ஆளும் ஒரு மிகப் பெரும் ஆட்சியாளராக மாறியதற்கும் இன்று வரை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றுவதற்கும் உரிய காரணம் என்ன தொடராக ஆராய்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்………….