August 30, 2010

கண்டு கொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ்.
இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.
MOTOR BIKE IN A HAND BAG
தொகுப்பு - Rasmin M.I.Sc
உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் பைக்  -   பைக்குள் தூக்கிச் செல்லப் படும் ஆச்சரியம். 
 நேரில் பார்வையிட்டார் (T.N.TJ) மாநில துணைத் தலைவர்


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

திருமறைக் குர்ஆனை யார் படித்து சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

திருமறையை படித்து அதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்துபவர்களையும் இந்த உலகம் தினமும் கண்டு வருகிறது.

அந்த வரிசையில் மிகமுக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் ஓர் ஏகத்துவ சகோதரர் தனது கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படை திருக்குர்ஆன் தான் எனக் கூறும் இந்தச் சகோதரின் அபார கண்டுபிடிப்புகள் தொடர்பாக விரிவாக நாம் ஆராய்வோம்.

கண்டுபிடிப்பாளர் கவ்ஸ்ஸின் குடும்பப் பின்னனி என்ன?

52 வயதான அப்துல் மஜீத் கவ்ஸ் இலங்கையின் எழில் கொஞ்சும் மத்திய மலை நாட்டின் தாயகமான கண்டி வத்தே கெதர பொல்கொல்ல என்ற ஊரில் ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் நான்காம் நபராகப் பிறந்தார்.

இவர் தற்போது திஹாரிக்கு அண்மையிலுள்ள ஹொரகொல்லை ஒட்சட்வத்தை என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இவருடைய தந்தை இலங்கை இராணுவத்தில் இயந்திரவியல் நிபுனராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கட்டுகஸ்தொட்டை என்ற ஊரில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.

அக்காலகட்டத்தில் ஒன்பது வயது சிறுவராக இருந்த கவ்ஸ் அவர்கள் பாடசாலையில் (School) நடந்த கண்காட்சி நிகழ்ச்சியில் நீராவியால் இயங்கும் ஓர் இயந்திரத்தை செய்து காட்சிப் படுத்தியதின் மூலமாக தனது அபார திறமையை வெளிக்காட்டினார்.

கண்ட களமும் கொண்ட கொள்கையும்.

ஓரே இறைவனை மட்டும் வணங்கி அவனுக்கு மாத்திரமே அணைத்து வணக்க வழிபாடுகளையும் செய்து திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதின் மூலமாக தன்னை ஓர் தூய்மையான தவ்ஹீத் வாதியாக மாற்றிக் கொண்ட சகோதரர் கவ்ஸ் அவர்கள் திருமறைக் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையே திருக்குர்ஆன் தான் என மனந்திறந்து சொல்பவர்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்தவர்.

நம்முடைய இந்த காலகட்டத்தில் நம் கண்முன் இருக்கும் ஜப்பான் சீனா இந்தியா போன்ற நாடுகளின் மோட்டார் வண்டிகள் அனைத்தையும் விட மிகச் சிரிய மோட்டார் வண்டியை இவர்தான் வடிவமைத்துள்ளார்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியொன்றை இந்தியாவைச் சேர்த்த ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தனது நண்பர் மூலம் அறிந்து கொண்ட கவ்ஸ் அவர்கள் செய்தி அறிந்து சரியாக ஒன்பது மாதங்களில் 9 அங்குல மோட்டார் வண்டியை கண்டுபிடித்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட மோட்டார் வண்டி 12 அங்குலம் உடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

(வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.)

கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த மோட்டார் வண்டியின் சிறப்பம்சங்கள்.

நமது வீடுகளில் அன்றாடம் நாம் பயண்படுத்தும் பொருட்களை வைத்தே இந்த சிரிய மோட்டார் வண்டியின் 40 வீதமான பாகங்களை கவ்ஸ் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

அத்துடன் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்த மோட்டார் வண்டிக்கு மற்ற மோட்டார் வண்டிகளுக்கு உள்ளதைப் போன்ற செஸி என்ற பகுதி இல்லை என்பதுதான்.

மோட்டார் வண்டியைப் பொருத்தவரை மனிதனுக்கு முதுகெழும்பு எவ்வளவு முக்கிமோ அந்தளவுக்கு மோட்டார் வண்டிக்கு செஸி என்ற பகுதி முக்கியமாகும்.

செஸி இல்லாவிடில் மோட்டார் வண்டி இல்லை என்ற கருத்தை பொய்யாக்கி செஸி இல்லாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியும் என தன்னுடைய கண்டு பிடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் கவ்ஸ்.

மோட்டார் வண்டி பற்றிய சில முக்கிய தகவல்கள்.

சகோதரர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்கள் தான் கண்டுபிடித்த மோட்டார் வண்டிக்கு வைத்துள்ள பெயர் Taprabane saying.. gift  from  allah  to  srilanka
 
இந்த மோட்டார் வண்டி 9 அங்குலம் உயரமும் 2.5 அடி நீளமும் கொண்டதாகும்.
அத்துடன் இந்த மோட்டார் வண்டி கைப் பையினுல் போட்டு செல்லும் வகையில் வெரும் 23 கிலோ கிராம் மாத்திரம் எடை கொண்டதாகும்.வண்டி தொடர்பான இன்னும் சில குறிப்புகள்.

Speed 35-40 km/h

Fuel  -  1 bottle (petrol + oil)

Engine capacity   -  50cc

Gear   -  centrifuga
l

பட்ட கஷ்டமும் கிண்ணஸில் கிடைத்த பதிவும்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த இந்த மிகச் சிரிய மோட்டார் வண்டி உலக சாதனைகள் மற்றும் சாதனையாளர்களின் பெயர்கள் பதியப் பட்டு கவுரவப் படுத்தப் படும் கிண்ணஸ் என்ற புத்தகத்திலும் பதியப் பட்டு உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்து வடிவமைத்தவர் என்ற பெருமையை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது என்பது மிக முக்கியமான விஷயமாகும்.இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் நிறைவேற்றப் படாத வாக்குறுதி.

தான் கண்டுபிடித்த உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை சகோதரர் கவ்ஸ் அவர்கள் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கவின் முன்னிலையில் அலரி மாளிகையிலும் ஓட்டிக் காண்பித்தார்.  


அப்போது கவ்ஸ் அவர்களின் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த சந்திரிக்கா சகோதரர் கவ்ஸை பாராட்டியதுடன் கண்டுபிடிப்புக்கான உரிமைச் சான்றிதழ் (பேடன்ட்) பெற்றுத் தருவதாகவும் ஜின்வா உலகக் கண்காட்சிக்கு அனுப்புவதாகவும் குறித்த கண்காட்சிக்காக ஜனாதிபதியின் நிதியிலிருந்து ஒரு தொகை பணம் தருவதாகவும் கூறினார்.

ஆனால் அவர் கூறிய அனைத்தும் இன்று வரை நிறைவேற்றப் படாத வெரும் வாக்குறுதியாகத்தான் இருக்கிறது.

நேரடியாக சந்தித்த TNTJ மாநிலத் துனைத் தலைவர்.

கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத் தலைவர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இலங்கை வந்த போது நேரடியாக சந்தித்துப் பேசினார்.

அவருடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய நிர்வாகிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது தனது கண்டுபிடிப்புக்களைப் பற்றி தெரிவித்த கவ்ஸ் அவர்கள் சிரிய ரக மோட்டார் வண்டியை ஓட்டியும் காண்பித்தார்.

சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அவரின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஹொரகொல்லைக் கிளையின் தலைவராக இருப்பவர் சகோதரர் கவ்ஸ் அவர்களின் மகன் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.)

சகோதரர் கவ்ஸின் இதர கண்டுபிடிப்புகள்.

தனக்கு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ள இந்த சிறப்பான அறிவுத் திறனை நல்வழியில் செலுத்தப் பாடுபடும் சகோதரர் கவ்ஸ் அவர்கள் சமுதாயத்திற்கு தேவையான் பல கண்டு பிடிப்புகளின் சொந்தக்காரராவார்.

தொழினுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளிலேயே கேஸ் மூலம் செயல்படும் வாகனங்கள் மிகப் பிரதானமானவை.

ஆனால் 1998ம் ஆண்டு சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டு பிடித்த பெற்றோல் மற்றும் காஸின் மூலம் இயங்கும் மோட்டார் வண்டி உலகில் தற்போதுள்ள மோட்டார் வண்டிகளை விட மிக வித்தியாசமானது.

காப்பரேட்டர் சம்பந்தப் படாமல் வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளமை இதன் விசேஷ அம்சமாகும்.

அப்துல் மஜீத் கவ்ஸ் வாயு இணைப்புக்கென்றே விசேஷ தொகுதியொன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது வரை உருவாக்கப் பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் வாயு இணைப்பானது காப்பரேட்டருடன் சம்பந்தப்படுத்தப்பட்டே இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதிலுள்ள மற்றுமொரு விசேஷமான அம்சம் வண்டி போய்க் கொண்டிருக்கும் போதே பெற்றோலிலிருந்து வாயுவிற்கும் வாயுவிலிருந்து பெற்றோலிற்கும் மாற்றும் வசதி உள்ளதாகும்.தற்போது நடைமுறையில் உள்ள வாகனங்களில் வாயு தீர்ந்த பின்னர் தான் பெற்றோலிலும் பெற்றோல் தீர்ந்த பின்னர் தான் வாயுவிலும் (கேஸ்) இயக்க முடியும்.

பூமியதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் கருவி.

பலவகையான கண்டுபிடிப்புத் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்ச்சியின் போது மக்களுக்கு அதனை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி போன்றவைகள் வரும் போது அல்லது வழமைக்கு மாற்றமாக ஏதாவது ஒரு செயல்பாடு கடலில் நடக்கும் போது அதனை தெரிவிப்பதற்கு உருவாக்கப் பட்ட கருவியைப் போல் சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்சி பற்றிய முன்னெச்சரிக்கைக் கருவியை உருவாக்கியுள்ளார்.

காட்டு யானையை விரட்டும் கருவி.

இலங்கையின் பல பகுதிகளிலும் காட்டு யானையின் தொல்லை இருப்பதாலும் அவை மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து மக்களுக்கு இடையூரை உண்டு பண்ணுவதாலும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற காட்டு யானைகளை விரட்டும் ஒரு கருவியையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

ஓட்டுனரின் வேலையை செய்யும் (முச்சக்கரவண்டி) ஆட்டோ.

ஓட்டுனர் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளை ஓட்டுனர் இல்லாமலேயே தண்ணீரின் மூலம் செயல் படுத்தும் ஆட்டோ ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

காற்றினால் இயங்கும் இன்ஜின்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் காற்றின் மூலம் இயங்கும் இன்ஜின் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் இதனைப் பார்க்கும் போது ஒரு இன்ஜின் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

திடீர் தீ விபத்திற்கான தீர்வு.

ஹஜ் காலங்களில் மக்கள் அதிகமாக கூடியிருக்கும் நேரத்தில் திடீர் தீ விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றை எப்படி தடுப்பது என்பதற்கு தன்னிடம் ஒரு சிறப்பான திட்டம் இருப்பதாக கூறும் கவ்ஸ் உரியவர்கள் முன்வந்தால் அதனை செய்து காட்டுவதாகவும் குறிப்பிடுகிறார்.

காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லும் சைக்கில்.

இருதியாக இவர் காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லக் கூடிய அளவுள்ள மிகச் சிரியதொரு சைக்கிலைக் கண்டுபிடித்துள்ளார்.உரிய சந்தர்ப்பத்தில் அதனை அறிமுகப் படுத்தவுள்ளதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

கண்டுகொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர்.

ஆரம்ப காலத்தில் உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருந்த முஸ்லீம்கள் இன்று கல்வியறிவற்றவர்களாக மார்க்க மற்றும் உலக கல்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படை அமைத்த ஒரு சமூகம் இன்று ஒரு கண்டுபிடிப்பாளரை கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கவலைக்குறிய செய்தியாகும்.

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!

அப்துல் மஜீத் கவ்ஸ் போன்றவர்கள் நமது சமுதாயத்தின் அறிவியல் சிற்பிகள் இவர் போன்றவர்களின் கண்டுபிடிப்புத்தான் அறிவியலின் எதிர்காலம்.

ஆதலால் வீனான தொலைக்காட்டி நிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கை விளையாட்டுக்களுக்கும் தங்கள் பணங்களை வாரி வழங்கும் தனவந்தர்களே இவரைப் போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப் படுத்துவதின் மூலம் நமது சமுதாயத்தை வளர்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன்வருவோமாக.No comments: