September 20, 2010

பி.ஜெய்னுலாப்தீன் ( PJ ) தவ்ஹீத்வாதியா? தீவிரவாதியா?
லக்பிம நிவ்ஸ் ஆங்கில நாளேட்டுக்கு மறுப்பு.
Rasmin  M.I.Sc (India) 
 

கடந்த 19.09.2010 ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாகவும் அந்த இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களான லக்ஷர் அல்உம்மா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ரங்கா ஜயசூரிய என்ற ஒருவரினால் எழுதப்பட்ட அந்த கட்டுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அதன் அமைப்பாளர் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதி என்றும் அபான்டமான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Wahhabist terriorist traning in srilanka ? என்ற தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகள் தான் என்றும் இங்குள்ள அமைப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் பயிற்சியளிப்பதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா?

லக்பிம ஆங்கில நாளேட்டின் செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும் அரசியில் மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.

அது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்த பெருமை இந்த அமைப்புக்கே உரியது.

இருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று சுமார் 15 லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.

இப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கௌ;வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.

கடந்த நான்கு வருடங்களாக இரத்ததானம் செய்வதில் தமிழகத்திலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு அமைபை தீவிரவாத இயக்கமாக லக்பிம பத்திரிக்கை வர்ணித்ததின் மூலம் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையை இந்தப் பத்திரிக்கை இழந்துள்ளது.

யார் இந்த பி.ஜெ?

தமிழுலகறிந்த பிரபல பேச்சாளரும் எழுத்தாளரும் குர்ஆன் மொழிபெயர்பாளரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிருவனத்தலைவருமான அறிஞர் பி.ஜெ அவர்கள் தமிழ்நாட்டில் தொன்டி என்ற ஊரில் பிறந்தவர் தனது பாடசாலைக் கல்வியின் பின்னால் அரபிமொழியைப் படித்து இஸ்லாமிய மார்க்கத்தை மிகத் தொளிவாக விளங்கிய பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டு தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்.

இளவயதிலேயே தனது பிரச்சாரத்தின் மூலம் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய அறிஞர் பி.ஜெ அவர்கள் இஸ்லாத்தின் மீது கலங்கம் சுமத்தியவர்களிடம் பகிரங்க விவாதம் செய்து அவைகளில் வெற்றியும் பெற்றார்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமியர்களின் புனித ஆலயம் கஃபாவை விமர்சித்த மதுரையைச் சேர்ந்த ஜபமனியுடன் விவாதித்து இஸ்லாமே உண்மை மார்க்கம் என்பதை தனது இளவயதிலேயே நிரூபித்துக் காட்டினார்.

நபியவர்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு தூதர் வருவார் என்று கூறி மிர்சா குலாம் என்ற பொய்யனை இறைவனின் தூதர் என்று வாதிட்ட காதியானிகளுடன் விவாதித்ததின் மூலம் தமிழகத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கினார்.

சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை செய்துவரும் கப்ரு வணங்கிகளுடன் பல விவாதங்கள் செய்து இணைவைத்தல் என்னும் பெரும்பாவத்திலிருந்த மக்கள் அந்த பாவத்தை விட்டும் விளகிவர இறைவனின் உதவியினால் இவரின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சிறந்த பேச்சாற்றலும் மிகவும் முக்கியத்துவப்பட்டது.

கடவுலே இல்லை என்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்துவந்த திராவிடக் கலகத்தைச் சேர்ந்வர்களுடன் விவாதித்து இருதியில் அவர்கள் அனைவரும் திருமறைக்குர்ஆனை சகோதரர் பி.ஜெயிடம் கேட்டுவாங்கிப் போவதற்கு அது காரணமாக அமைந்தது.

திருமறைக் குர்ஆனை மிக எழிய தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு மிகத் தெளிவான விளக்கவுரைகளை வழங்கியதின் மூலம் படித்த மற்றும் பாமர மக்களிடமும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அத்துடன் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அவருடைய புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.

அச்சத் என்கின்ற மாணவர் சகோதரர் பி.ஜெயுடைய வரலாற்றை எழுதி முதுகலைப்பட்டத்தை வென்றதும்  இங்கு குறிப்பிடத்தக்கது

கடந்த 25 வருடங்களாக பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மார்க்கப் பிரச்சாரம் செய்துவரும் சகோதரர் பி.ஜெ அவர்கள் சமுதாய சேவையிலும் தன்னை அர்ப்பனித்துக் கொண்டவர்.

பி.ஜெ தீவிரவாதியா?

சகோதரர் பி.ஜெ அவர்களை லக்பிம நாளேடு தீவிரவாதியாக வர்ணித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும்.

தீவிரவாதத்திற்கு எதிராக பி.ஜெ அவர்களின் பங்களிப்பு என்ன?

கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற மாற்று மத அன்பர்களுக்கான நிகழ்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.

1980களிலிருந்து இலங்கையில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை எதிர்த்த இந்தியாவின் ஓரே அமைப்பு டி.என்.டி.ஜெ மாத்திரம் தான் அதுபோல் ஒரே தலைவரும் சகோதரர் பி.ஜெ மாத்திரம்தான்.

இலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் இந்த பி.ஜெ

அல்கைதா லக்ஷர் ஏ தைபா அல்உம்மா மற்றும் இது போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தையும் தெளிவாக விமர்சித்து எதிர்க்கக் கூடிய ஒரு மிகப் பெரும் பிரச்சாரகராகவும் இவர் திகழ்கிறார்.

அல்உம்மா போன்ற அமைப்புகள் இவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் இவர் தீவிரவாதத்தை எதிர்பதனால் தான் என்பதையும் இங்கு குறிபிட வேண்டியுள்ளது.

தமிழக முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.

லக்பிம பத்திரிக்கை ஆசிரியரே உங்களிடம் சில கேள்விகள்.

இஸ்லாமியப் பேரறிஞர் சகோதர் பி.ஜெ அவர்களை தீவிரவாதிகளாக தாங்கள் சித்தரித்துள்ளீர்கள்………

உங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தினதும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.

பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா?

டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது?

கலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா?

மன்மோகன்சிங்குடன் பி.ஜெ பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம செய்தி வெளியிடுமா?

தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான டி.என்.டி.ஜெயையும் அதன் அமைப்பாளரையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.

அப்படி மண்ணிப்புக் கேட்காத பட்சத்தில் லக்பிம நாளிதல் பெரும் சட்டச் சிக்களை எதிர் கொள்ளவேண்டிவரும் என்பதையும் பத்திரிக்கையின் விற்பனை கேள்விக்குறியாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

மூட நம்பிக்கைகளையும் தீவிரவாதத்தையும் கண்டித்து தன்னுடைய வாழ்நாளின் பெறும் பகுதியை இதற்கு எதிரான பிரசாரத்தில் கழித்துக் கொண்டிருக்கின்ற மூத்த இஸ்லாமிய அறிஞரான பி.ஜைனுல் ஆபிதீனை தீவிரவாதி என சொன்னதற்கு அந்த ஆங்கில ஏடு உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்களை உறுப்பினராக கொண்டிருக்கின்ற சத்திய பேரியக்கமாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் கூடாரம் என்று பொய் பிரச்சாரம் செய்யும் லக்பிம ஏடு மன்னிப்பு கேட்கும் வகையில் இலங்கை ஏகத்துவ சகோதரர்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
(குறிப்பு: இலங்கை பாராளுமன்றத்திலேயே அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீனை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டி பேசியிருக்கின்றார் என்ற தகவலை முன்னர் நான் கேள்விப் பட்டிருக்கின்றேன்.)