December 25, 2010

தூயவனை நெருங்க தூய்மை அவசியமே!
RASMIN M.I.Sc

உலக மக்களில் பெரும்பாலானவா்கள் கடவுல் நம்பிக்கை கொண்டவா்களாகவே இருக்கிறார்கள்.கடவுல் நம்பிக்கை கொண்ட பலர் கடவுளை சரியாக புரியாத காரணத்தினால் பல பிரச்சினைகளுக்கும்,சிக்கள்களுக்கும் ஆளாவதை நாம் கண்டு வருகிறோம்.

கடவுளின் கடவுள் தன்மையை சரியாக விளங்காமைஇகடவுலை நெருங்குவதற்காக சரியான முறையை அறியாமை இதுபோன்ற பல காரணங்களினால் இன்றைக்குப் பலா் கடவுளுக்காகவென்று தங்கள் சொத்துக்களையும்,செல்வங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலரோ தான் கடவுளை எப்போதும் நினைக்க வேண்டும்இகடவுளுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல்,உள தூய்மையைப் பற்றியோ அல்லது கடவுளை நெருங்கியதாக சொல்லிக் கொள்பவா;களின் தூய்மையைப் பற்றியோ கொஞ்சம் கூட சிந்திக்காமல் அசுத்தங்களின் மொத்த உருவங்களாக,அழுக்குகளின் பிறப்பிடங்களாக மாறியிருக்கிறார்கள்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங் காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் (7:31)

தொழுமிடங்களில் அலங்காரமாக அழகான முறையில் தூய்மையாக நிற்கும்படி இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.ஆனால் இன்று நமக்கு மத்தியில் தொழுகைக்காக அழைக்கும் ஒரு கூட்டத்தை பற்றி யோசித்தால் தொழுகைக்கு அழைப்பதுதான் அவா்களின் வேலை மற்றபடி அவா்களுக்கும் அலங்காரத்திற்கும் தொடர்பே இல்லை. உழு செய்துவிட்டு பள்ளிக்குள் வருபவா்கள் ஸப்புகளில் நின்று கொண்டு மிஸ்வாக் குச்சியினால் பல்லை துலக்கிவிட்டு அப்படியே மீண்டும் தங்கள் ஜுப்பா அல்லது சட்டைப் பைகளுக்குள் போட்டுக் கொள்வார்கள் அவா்களின் சட்டைப் பைகளை அல்லது ஜுப்பாப் பைகளைப் பார்த்தால் அவா்களின் தூய்மையின் லட்சனம் தெரிய வரும்.

அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 147

அழகை விரும்பும் அல்லாஹ்வின் பள்ளியில் அசிங்கத்துடன் இருப்பவா்கள் எப்படி அல்லாஹ்வின் அருளைப் பெற முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைமுடி பிரிந்தவாறு பரட்டைத் தலையில் ஒரு மனிதரைக் கண்டார்கள். ”இவர் தனது முடியை சரி செய்யக் கூடியதை (எண்ணெயை) பெற்றிருக்கவில்லையா?'' என்று கேட்டார்கள். இன்னொரு மனிதரையும் பார்த்தார்கள். அவர் மேல் அழுக்கு ஆடை இருந்தது. (அவரை நோக்கி) ”இவர் தன்னுடைய ஆடையைக் கழுவுவதற்கான நீர் இவரிடம் இல்லையா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 3540

பரட்டைத் தலையாக தலையை ஒழுங்காக வாரி எண்ணை தேய்த்து ஆழகாகமல் இருந்த மனிதரையும்இஅழுக்கு ஆடையுடன் இருந்த மனிதரையும் பார்த்து நபியவர்கள் கண்டித்து அவா;களின் தூய்மையை வலியுறுத்துகிறார்கள்.

ஆனால் இன்றைக்கு நமக்கு மத்தியில் மார;க்கம் பேசும் பல சகோதரர;கள் நபியவா்களின் இந்த நடைமுறைகளை கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.

தலைக்கு எண்ணை பூசாமல்,ஆடை இருந்தும் அழுக்கு ஆடைகளுடனேயே காட்சி தரும் பலரை நாம் அடிக்கடி கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

ஒரே ஒரு ஆடை தான் நம்மிடம் இருந்தாலும் அதனை துவைத்து, சுத்தப் படுத்தி,அழகாக்கித் அணிய வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! (74:4)

நாம் அணியும் ஆடைகள் தூய்மையாக இருப்பது நமக்கு மட்டுமன்றி நமது அயலவா;களுக்கும் சிறந்ததே!

அசுத்தமான ஆடையுடன் இருக்கும் போது பல நோய்களும் நமக்கு ஏற்படும்.நமக்கு ஏற்படும் போது அவை நம்மை சுற்றியிருப்பவா்களையும் பாதிக்கும்.

ஒரு உண்மையான முஸ்லிம் எந்தக் காரணம் கொண்டும் மற்ற மக்களுக்குத் தொல்லை கொடுப்பவனாக இருக்க மாட்டான்.ஆகையால் நாம் எப்போதும் நமது ஆடைகளை தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று கடவுளை வழிபடும் தலங்களாக அறிமுகம் செய்யப் பட்டுள்ள இடங்களைப் பார்க்கும் போதே அங்கு செல்வதற்கு கால்கள் கூசும்.

போலிக் கடவுல்களுக்கு படைப்பதற்கு கொண்டு வந்த பழங்களின் அழுகிய பகுதிகள் பூஜையுடள் தொடர்புடைய பொருட்டகளின் அசுத்தங்கள்,எண்ணைகள் என பார்பதற்கே மிகவும் அறுவெருப்பான ஒரு தோற்றத்தை அந்த மதத் தளங்கள் கொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாமோ வழிபாடு நடத்தப் படும் பள்ளிவாயலில் எச்சில் துப்புவதற்குக் கூட இடம் தரவில்லை.ஏன் என்றால் அந்த இடம் மிகவும் தூய்மையாக இருந்தால் தான் அந்த இடத்திற்கு மக்கள் நிம்மதியாக வருவார்கள்.இல்லாவிடில் மனதில் கல்லை சுமந்து கொண்டுதான் இறைவனை தியானிப்பதற்கு வருவார்கள்.

பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: புகாரீ 415

எந்தக் காரணம் கொண்டும் பள்ளியில் எச்சில் உமிழக் கூடாது தவறுதலாக உமிழ்ந்து விட்டால் அதனை மண்ணுக்கடியில் மறைக்க வேண்டும் அந்த இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

அன்பின் சகோதரர்களே! 

தூய்மையான இஸ்லாத்தை தூய்மையுடன் பின்பற்றி மறுமையில் வெற்றி பெருவோமாக. No comments: