January 31, 2012

தன் முகத்தில் தானே எச்சில் உமிழும் தமிழ் தளங்கள்.
கொழும்பில் முஸ்லீம் தீவிரவாதக் குழுக்களா?
RASMIN M.I.Sc


கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையை ஆட்கொண்டிருந்த தமிழ் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழும் நிலை உருவாகியிருக்கிறது.

தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்டு தமிழ் பொது மக்களை கொலை செய்து அதில் இன்பம் கண்ட மனித மிருகம் பிரபாகரின் அடிவருடிகள் அடியோடு அழிக்கப்பட்டுள்ள இவ்வேலையில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பாணியில் “முஸ்லீம் ஆயுதக் குழுகள்” என்ற கோஷத்தைத் தற்போது தமிழ் பயங்கரவாதிகள் முன்னெடுக்கின்றார்கள்.

ஆயுதக் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட்டாலும் மனித வெறி பிடித்த அரக்க குணத்தை இவர்களிடமிருந்து இல்லாதொழிக்க முடியாமல் இருப்பது கவலைக்குறிய விஷயமே!

முஸ்லீம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்களா?

இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் செயல்படுவதாக சில பாசிச சிந்தனை கொண்ட தமிழ்த் தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.  

ஊடக தர்மத்தைக் கூட அறியாத இத்தகைய ஊடகங்கள் பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட செய்திகளைப் பரப்புவதின் மூலம் தாங்கள் நடு நிலைவாதிகள் என்று வாதிட நினைக்கிறார்கள் போலும்.

ஆனால் உண்மை நிலை என்னவெனில் இலங்கையில் தீவிரவாதிகள் பட்டியலில் ஒரு முஸ்லிமைக் கூட இவர்களினால் காட்ட முடியாது. இந் நாட்டு முஸ்லீம்கள் இலங்கைக்கு நன்மை தான் செய்துள்ளார்களே தவிர தமிழ் தீவிரவாதிகளைப் போல் மனித இரத்தம் குடிக்க நினைக்கவில்லை.

முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்தியிருந்தால்…………

உண்மையில் முஸ்லீம் சமுதாயத்தினர் ஆயுதம் ஏந்த நினைத்திருந்தால் என்றைக்கோ ஏந்தியிருப்பார்கள். காத்தான் குடியில் முஸ்லீம்களை தமிழ் தீவிரவாதிகள் கொலை செய்த நேரமே ஆயுதத்தை கையிலெடுத்திருப்பார்கள்.

ஆனால் இலங்கை முஸ்லீம்கள் ஜனனாயகத்தை நேசிப்பவர்கள் என்பதை உலகுக்கு பரை சாற்றும் வண்ணம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு அரசியல் ரீதியில் நீதி வேண்டினார்கள்.

அரசியல் முறையில் தீர்வு பெறத் துப்பற்ற இவர்கள் ஆயுதம் ஏந்தினோம் என்ற பெயரில் பொது மக்களைக் கொலை செய்து மனித இரத்தம் குடித்ததை மறக்க முடியாமல் மீண்டும் முஸ்லீம்களை சீண்டிப் பார்க்கிறார்கள்.

முஸ்லீம்கள் பற்றி அவதூறு பரப்பி, அடுத்தவர்களின் குறைகளை தேடி அழைந்து, தமது குறைகளை படம் பிடித்துக் காட்டிய தமிழ் தளங்களின் நிலையோ கறிச்சட்டியில் வாய் வைத்த சொறிப் பூனையின் நிலையாய் மாறிவிட்டது பரிதாபத்திற்குரிய விஷயமே. முல்லு ருசியில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டதால், இவர்களுக்கு சூரியனே இருட்டாகத் தெரிகிறது. குதிரைக்குக் கொம்பைக் கொடுக்காத இறைவன், கழுதைக்குக் காலைக் கட்டையாக்கி விட்டதன் தத்துவமும் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது.

தமிழ் தீவிரவாதிகளினால் தமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதியையும், நியாயத்தையும் அரசியல் ரீதியில் பெற்றுக் கொள்ள முயலும், அடுத்தவர்களுக்கு இம்மியளவும் பாதிப்பை நினைத்தும் பார்க்காக இலங்கை முஸ்லீம்கள் விஷயத்தில் வேகமாக செல்லும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எருமைகளைப் போல், இவர்கள் காரணமின்றி வெறிக் கூச்சல் போடுவது ஏன்!?

நியாயத்தை உணர முடியாது, உண்மையைப் பேச முடியாது, யோக்கியத் தனத்தையும், அயோக்கியர்களையும், அவதூறு பரப்புபவர்களையும் காப்பாற்ற பக்கங்களைப் பாழ்படுத்தி, பொன்னான நேரத்தையும் காலத்தையும் சக்தியையும் வீணடித்து, டாலருக்கும், யுரோவுக்கும் அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!  

இவர்களுக்கு முன்பே இஸ்லாமியத் தீவிரவாதம் (?) என்ற பெயரில் பேசிய மற்றும் எழுதியவர்களுக்கு நாம் பல முறை பதில் எழுதியுள்ளோம் அவற்றையும் கீழே தொகுத்துள்ளோம்.

பார்க்க :
No comments: