March 20, 2012

இலங்கைக்கு எதிரான மேற்கு நாடுகளின் (ஐ.நா) தீர்மானத்தை முஸ்லீம்கள் எதிர்ப்பது ஏன்?
வீடியோ ஆதாரத்துடன் கூடிய அலசல்.
RASMIN M.I.Sc 

காரணம் என்னவென்றால், இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 22 அல்லது 23ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிகாவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் எதிர்புத் தெரிவித்து வருவதினால் இலங்கை முஸ்லீம்களை சீண்டும் விதமாக இணையதளங்கள் வாயிலாகவும், தொலைக் காட்சி மற்றும் பத்திரிக்கை மூலமும் பலவிதமான கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் அவர்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்காமல் கொலைக் குற்றம் புரிந்த இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்பதே முஸ்லீம்களுக்கு எதிராக பேசுபவர்களின் முதல் வாதமாக இருக்கிறது.

இலங்கையில் இடம் பெற்ற கடைசி யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமே மறுக்கவில்லை. சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமே உறுதி செய்திருந்தது.

ஆனால் அவர்கள் வேண்டுமென்று கொலை செய்யப்பட்டவர்கள் அல்லர்.

யுத்தம் ஒன்று நடந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில் இருக்கும் பொது மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது வழமையான ஒன்றுதான். ஆனால் திட்டமிட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டால் தான் அதைத் தவறு என்று வாதிட முடியும்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது புலித் தீவிரவாதிகளில் பலர் பொதுமக்களுடன் சேர்ந்து விட்டார்கள். தீவிரவாதியையும், பொதுமக்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. அந்நேரத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கவும் வேண்டும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.

இலங்கை அரசின் இடத்தில் இந்திய அரசோ அல்லது அமெரிக்காவோ ஏன் தமிழக அரசு இருந்தால் கூட யுத்தத்தின் இறுதியை எட்ட வேண்டும் என்ற முனைப்பில் அந்த முடிவைத் தான் எடுத்திருக்கும்.

மனித உரிமை மீறல் தொடர்பில் பேச அமெரிக்காவுக்கு அருகதையில்லை.

எந்த அமெரிக்கா இலங்கைக்கு எதிரான போர் குற்ற அறிக்கையை கொண்டு வருகிறதோ அதே அமெரிக்கா தான் ஒரு உஸாமா பின் லேடனை பிடிப்பதற்காக முழு ஆப்கானிஸ்தானையும் தாக்கி துவம்சம் செய்தது.

சதாம் என்ற தனிமனிதனின் மீது கொண்ட கோபம் ஈராக்கையே அழிக்கத் துணிந்தது அமெரிக்கா.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்காக இவ்வளவு குதிக்கும் அமெரிகாவும் அதன் நேச நாடுகளும் இன்றைக்கும் பாலஸ்தீன மண்ணில் குண்டு மழை பொழிகிறார்களே இதைப்பற்றி .நா சபையில் வாய் திறப்பதற்கு யாருக்காவது தைரியம் உண்டா?

உள்நாட்டில் நடந்த யுத்தத்திற்கு இவ்வளவு குதிக்கும் அமெரிகாவும் அதன் நேச நாடுகளும் பாலஸ்தீனம், ஆப்கான், ஈராக் இனிமேல் ஈரான் என்று வெளிநாடுகள் விஷயத்தில் தலையிடுவதை நிறுத்தவில்லையே?

கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் 16 பேரை கொடூரமாக கொலை செய்த அமெரிக்க இராணுவ வீரனை என்ன செய்தார்கள்? தண்டித்தார்களா? இங்கே அமெரிக்காவின் மனித உரிமை செத்துப் போனது ஏன்?

இதைப் பற்றியும் சர்வதேச சமூகம் சற்று சிந்திக்க வேண்டும்.

தமிழக மக்கள் புரிய வேண்டிய முக்கிய செய்தி.

இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு சாராரும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினரும் மாத்திரம் தான் அமெரிக்கா .நா சபையில் கொண்டு வரும் பிரேரனை தொடர்பில் கடும் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றார்கள்.

ஆனால் இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இது தொடர்பில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என்பது தெளிவானதாகும். காரணம் இலங்கையில் சுதந்திரக் காற்றை அவர்கள் உணர்ந்து வாழ்கிறார்கள்.

சிறுவர் கடத்தல்கள் இல்லை, கப்பம் கேட்கும் காடையர்கள் விடுதலைப் புதிகள் இன்று இல்லை, அதனால் அவர்களால் இந்த சந்தோஷத்தை நன்கு உணர முடிகின்றது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மாத்திரம் இந்த பிரேரனை தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் காரணம் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரேரனையின் உண்மைத் தன்மை தெரியவில்ல. இன்னும் சிலரோ தங்கள் அரசியல் தலைவர்களின் கருத்துக்குக் கட்டுப்பட்டு அவற்றை உள்வாங்கியுள்ளார்கள்.

அமெரிக்காவின் இந்தப் பிரேரனை மூலம் இலங்கையில் என்ன நடை பெறப் போகிறது என்று இவர்கள் நினைக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்ஷ வின் அரசு கவிழ்க்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் .நா வின் படைகள் இலங்கையில் இறக்கப்பட்டு இலங்கை அரச படைகள் கையாலாகாமல் போய் விடும் என்று பலரும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நடக்கப் போவது அதுவல்ல…. மிஞ்சி மிஞ்சிப் போனால் இலங்கைக்குள் மீண்டும் ஒரு இனமோதலை அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் உண்டாக்கும் அவ்வளவு தான்.

அமெரிக்காவின் தமிழர் பா(வே)சத்திற்குக் காரணம் என்ன?

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரனையை .நா பாதுகாப்பு சபையில் கொண்டுவருவதற்கான காரணங்கள் இரண்டு மாத்திரம் தான்.

1.    அமெரிகாவின் ஆயுத விற்பனை தொடர்ந்து நடை பெற வேண்டுமானால் ஆப்கான், ஈராக், பாலஸ்தீனம் போல் இலங்கையிலும் யுத்தம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்படி நடக்காமல் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதினால் அவர்களின் ஆயுத விற்பனையில் சிறு இறக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை சரிகட்ட இது போன்ற தீர்மானங்கள் மூலமாக இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத கலாசாரத்தை உண்டாக்க முயல்வது.

2.   பல தடவைகள் இலங்கைக்குள் அமெரிக்கா மூக்கை நுழைக்கப் பார்த்ததும் அதில் தோற்றுப் போனதும் பலரும் அறிந்த ஒன்றுதான். யுத்தத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் எப்படியாவது பிரபாகரன் உள்ளிட்ட தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்களை அமெரிக்கா காப்பாற்ற எத்தனித்தது. ஆனால் அதன் முனைப்பு கைகூடுவதற்குள் இலங்கையின் அனைத்துப் பகுதியும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. (கடைசி யுத்தில் மனித நேயத்தின் பேரால் பிரபாகரனையும், மற்ற தலைவர்களையும் காப்பாற்ற நினைத்த அமெரிக்கா தான் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தியது என்பது மேலதிக செய்தி)

இலங்கையின் திருகோணமலைத் துறை முகத்தை கைப்பற்றி அங்கு தளம் அமைக்கலாம் என்று திட்டம் போட்டது அமெரிக்கா ஆனால் அதுவும் முடியாமல் போனது. எண்ணை அகழ்வு என்ற பெயரிலாவது உள்ளே நுழையலாம் என்று நினைத்தால் அதிலும் சீனா முந்திக் கொண்டது. மொத்தத்தில் அனைத்து முனைப்புகளும் தோற்றுப் போய் இலங்கையின் தொடர்புகள் அனைத்தும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், கியுபா போன்ற அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்த நாடுகளுடன் தான் பெரும்பாலும் இருக்கிறது.

இந்தத் தொடர்புகளை இல்லாமல் ஆக்கி தனது ஆதிக்கத்தை இலங்கையில் நிறுவ அமெரிக்காவுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பமாக இதனை அமெரிக்கத் தலைமை கருதுகின்றது. அதனால் தான் இந்தப் பிரேரனையை அமெரிக்கா கொண்டு வருகிறதே தவிர தமிழர்கள் மீதுள்ள பாசம் என்ற தமிழகத் தலைவர்கள் நினைத்தால் அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக மாறிவிடும்.

இந்த இரண்டு காரணங்கள் தான் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதற்கான காரணமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

அது மாத்திரமன்றி ஒரு வாதத்திற்கு இந்த பிரேரனையில் அமெரிக்கா ஜெயித்தாலும் அதனால் எதுவும் இலங்கைக்குள் செய்துவிட முடியாது.

குறிப்பாக சதாமை தூக்கில் போட்டதைப் போல் ராஜபக்ஷவை தூக்கில் போடவோ இலங்கை இராணுவத்தின் பலத்தை இல்லாமலாக்கவோ அமெரிக்காவினால் முடியாது.

இலங்கை அரசினாலேயே அமைக்கப்பட்டகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடை முறைப்படுத்தும் படி வேண்டிக் கொள்ள முடியும். அவ்வளவு தான்.

முஸ்லீம்கள் இந்தப் பிரேரனையை எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

இலங்கையைப் பொருத்த வரையில் தமிழீழப் போராட்டத்தை புலிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர்கள் புலிகளுக்கு எதிராக இருந்ததில்லை. குறிப்பாக தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கவில்லை.

ஆனால் புலிகள் தாம் முஸ்லீம்களை எதிரிகலாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆம் சாதாரணமாக ஒரு ஆயுதக் குழுவாக இருக்கும் போதே பிரபாகரனும் அவனுடைய படையும் முஸ்லீம்களுக்கு எண்ணிலடங்காத துண்பங்களை தந்த போது இவர்கள் கையில் தனித் தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும்?

மறக்க முடியாத வடக்கு வெளியேற்றம்.


1992 ம் ஆண்டு எந்த ஒரு இலங்கை பிரஜையும் மறக்க முடியாத
மறக்கக் கூடாத ஒரு நிகழ்வை விடுதலைப் புலிகள் நிகழ்த்தினார்கள்.

அதுதான் வடக்கின் மைந்தர்களான முஸ்லீம்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்ட அகோர நிகழ்வு நடந்த ஆண்டு.

உடுத்த உடையுடன்சல்லிக் காசின்றிநடை பயணிகளாக பிறந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டார்கள் வடக்கு முஸலீம்கள்.

முஸ்லீம்களின் மேல் இருந்த இனத் துவேஷம் யாழ்பானத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள் என்று இரு இனத்தவர்கள் வாழ்ந்தும் முஸ்லீம்களை மாத்திரம் வெளியேற்றினார்கள்.

இலங்கையின் ஜப்பான் என்று வர்ணிக்கும் அளவுக்கு செல்வச் செழிப்போடும், வருமான உச்சத்துடனும் வாழ்ந்த வடக்கு முஸ்லீம்களின் வருமானம் பரிக்கப்பட்டு, வீடு வாசல்களை இழந்து, திக்கற்றவர்களான விடப்பட்டார்கள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய்ப் பழகிய தங்கள் தாய் மொழிச் சமுதாயத்தை ஈவு இறக்கமின்றி வெளியேற்றினார்கள் தீவிரவாத புலிகள்.

அன்று பாராளுமன்றத்தில் இதற்காக குரல் கொடுப்பதற்கு சொற்பமான முஸ்லீம் அரசியல் வாதிகளே காணப்பட்டார்கள்.

அரசாங்கத்தின் கையாளாகாத் தன்மையும் அப்போது உச்சத்தில் இருந்ததினால் அரசாங்கம் கூட புலிகளுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரிக்கும் நிலை உருவானது. அன்று புத்தளம் மாவட்டத்தில் குடியேறிய முஸ்லீம்கள் அகதி அந்தஸ்துடன் சுமார் 18 வருடங்களை முகாம்களில் கழித்தார்கள் வடக்கு முஸ்லீம்கள்.

காத்தான்குடி படுகொலையும், விடுதலைப் புலிகளின் துரோகமும்.

எந்தவொரு போராட்ட அமைப்பாக இருந்தாலும் அவர்களின் போராட்டம் சரியானதாக இருந்தால் அவர்கள் யாரை எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களைத் தான் தாக்க வேண்டும், அதிலும் போராட்ட அமைப்பென்றால் அவர்கள் இராணுவத்துடன் தான் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டுமே ஒழிய தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக பொது மக்களை பகடைக் காயாக மாற்றுவது எந்த ஒரு விதத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.


தங்கள் உடன் பிறந்த சகோதரர்களாய்ப் பழகிய இஸ்லாமிய சமுதாயத்தை கருப்புக் கண்ணாடி கொண்டு பார்த்தார்கள் விடுதலைப் புலிகள். தங்கள் போராட்டம் நியாயமானது என்றிருந்தால் அந்த போராட்டத்தில் முஸ்லீம்களும் கண்டிப்பாக பங்கெடுத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானதாகவோ ஒரு கோரிக்கையை முன்னிருத்தியதாகவோ இருக்கவில்லை.

தனி ஈழம் என்று அவர்கள் முன் வைத்த வாதம் கூட போலியானதுதான் ஒரு சிலரின் சுய விருப்பு வெருப்புக்கா ஓராயிரம் தமிழ் சகோதரர்க்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.

அந்தத் தருணம் ? ? ? ? ? ?

கிழக்கின் பெரும்பான்மை சமுதாயமாக இருந்த முஸ்லீம் சமுதாயத்தினர் தமிழீல தீவிரவாதிகளின் அகோரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

இறைவனை வணங்கும் அமைதியான இரவுத் தொழுகையில் ஈடுபட்டுள் கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லீம்களை கண் மண் தெரியாமல் கல் நெஞ்சக்கார புலி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்து இறைவனைத் தொழும் பள்ளியில் இரத்த ஆறு ஒடச் செய்தார்கள் கொலைகார வெறியர்கள்.

இது மட்டுமா? இன்னும் பல................

வடக்கில் ஆரம்பித்தவர்கள் நாடு முழுவதும் முஸ்லீம்களின் மீது குறிவைத்து பல தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.

பொலன்னறுவையில் முஸ்லீம்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

வடக்கில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் ஒருவர் விடாது துரத்தியடித்தார்கள்.

காலியில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்கள்.

கிழக்கில் கருணா தலைமையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வடக்கு முஸ்லீம்களை விரட்டியடித்ததைப் போல் மூதுர் முஸ்லீம்களையும் தங்கள் ஊரைவிட்டு விரட்டினார்கள்.

வாகரையை சுற்றியிருந்த முஸ்லீம்களை அந்த இடங்களை விட்டும் துரத்தியடித்தார்கள்.

முஸ்லீம் மீனவர்களின் தொழில் துறைகளை நாசப்படுத்தினார்கள்.

வரி வசூல் என்ற பெயரில் பலவந்தமாக கப்பம் வசூல் செய்தார்கள்.

முஸ்லீம் தனவந்தர்களை பிணைக் கைதிகாகப் பிடித்து பணம் வசூல் செய்தார்கள்.

கிண்ணியாவில் முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.

இப்படி பட்டியல் போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் போடுமளவுக்கு முஸ்லீம்களுக்க எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு துரோகங்களை இழைத்தவர்கள் தான் இந்த விடுதலைப் புலித் தீவிரவாதிகள்.


இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாகவும், புலித் தீவிரவாதிகளின் கொடூரங்கள் தொடர்பாகவும் இலங்கைத் தமிழர்களின் வாக்குமூலத்தைப் பாருங்கள்.


இந்த வீடியோவில் புலிகளின் அரசியல் பிரிவின் பொருப்பாளராக இருந்த தமிழ் செல்வனின் மனைவியின் வாக்குமூலமும் பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவின் உண்மை தன்மை பற்றி அலசும் வீடியோக் காட்சியைப் பாருங்கள்.
பாலச்சந்திரன் படுகொலை நிலை என்ன?

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஒரு வீடியோ காட்சியை செனல் 4 என்ற டிவி செனல் வெளியிட்டுள்ளது. அதில் பாலச்சந்திரன் இலங்கை அரச படையினலால் கொலை செய்யப்பட்டான் என்ற தகவலை அந்த தொலைக்காட்சி பதிவு செய்கின்றது.

உண்மையில் இலங்கை அரச படை அப்படி செய்திருந்தால் நாமும் அதனைக் கண்டிக்கிறோம். ஆனால் இதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது. ஏன் என்றால் இன்றைக்கு 12 வயது பாலச் சந்திரன் கொல்லப்பட்டமைக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழக அமைப்புக்களோ அதன் தலைவர்களோ இதற்கு முன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 12 வயது கூட நிறம்பாத சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டதற்கு எதிராக ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?

12 வயது பாலச்சந்திரனை கொலை செய்ததை பெரிதாகப் பேசும் தமிழக அரசியல் தலைவர்களோ அல்லது செனல் 4 தொலைக்காட்சியோ அல்லது புலிகள் அமைப்பு சார்ந்த இணையதளங்களோ காத்தான்குடி பள்ளிவாசலில் 5 வயது சிறுவர்கள் கொல்லப்பட்ட போது ஏன் வாய் திறக்கவில்லை?

உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

உங்கள் கையில் ஆயுதம் இருக்கும் போது யுத்த களத்திற்கு சென்று போராடுவதற்கு பச்சிளம் பாலகர்களை சேர்த்தீர்கள். அவர்களின் உயிர்களை துச்சமென நினைத்தீர்கள். ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாதுகாக்க புலிகளின் உயர் பாதுகாப்புப் படை பொருப்பேற்றது.

மற்ற சிறுவர்களெல்லாம் உயிர் துறக்கும் யுத்த களத்தில் போராட வேண்டும். பிரபாகரின் மகனின் உயிர் போகாமல் அவனை பாதுகாக்க உயரிய பாதுகாப்பு? என்னே நியாயம்.

இங்கு நாம் முஸ்லீம் தமிழர்கள் என்று பிரித்து பேசவில்லை. பிரபாகரின் மகன் படையினரால் கொல்லப்பட்டிருந்தால் அது தவறுதான் ஆனால் அதைவிட பல மடங்கு பெரிய தவரை பிரபாகரனும் அவனது தீவிரவாத படையும் செய்திருக்கிறது.

முஸ்லீம் சிறுவர்களை கொலை செய்தது மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிள்ளைகளையே பலவந்தமாக படையில் சேர்த்து யுத்த களத்திற்கு அனுப்பினார்கள்.

உண்மையில் தமிழக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் சொல்வதைப் போல் இலங்கை அரசு தமிழர்கள் திட்டமிட்டு அழிக்க நினைத்திருந்தால் ஏன் முல்லிவாய்க்காலுக்குபோக வேண்டும்? கொழும்பு வெள்ளவத்தையிலேயே அதை ஆரம்பித்திருக்களாமே?

புலித் தீவிரவாதிகளின் இந்த அயோக்கியத்தனங்கள் தமிழக மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இலங்கை மக்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூச்சலிடுவதைப் போல் இலங்கைத் தமிழர்கள் கூச்சலிடவில்லை.

இவ்வளவு பெரிய துரோகம் செய்த புலித் தீவிரவாதிகளை எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறோம்.

தமிழக அரசியல் தலைவர்களே!

இலங்கை நாட்டின் மக்கள் தமிழர், சிங்களவர், முஸ்லீம் என்ற இன வேறுபாடின்றி அவரவரின் மதத்தின் படி ஒற்றுமையாக வாழ ஆரம்பித்திருக்கும் இத் தருணத்தில் உங்கள் அரசியல் நலனுக்காய் அமெரிக்காவின் கைப்பாவைகளாக மாறி எங்கள் ஒற்றுமையை இல்லாமலாக்கிவிடாதீர்கள்.


இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக புலித் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதல்களின் ஒரு பகுதியை பாருங்கள்.முஸ்லீம்களுக்கு எதிராக இவ்வளவு துரோகத்தை பெரிய கொலை வெறித் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளை நாம் எப்படி அங்கீகரிப்பது?

குறிப்பு :
மேலுள்ள வீடியொக்களில் இடம் பெற்றிருக்கும் பாடல் வரிகளுக்கும், இசைக்கும் வீடியோவை வெளியிட்டவர்களே பொருப்பாளர்கள் ஆவர். 

2 comments:

shahul said...

america oru kullanari kuttam tamilarkalai singala ranuvamum,muslimkalai ltte thiviravathikal alikum poothu intha america enge pooierunthathu palastine makkalai daily kolai seiyum isrel thiviravathikalai america ennaseithathu be careful tamils in srilanka

Anonymous said...

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களிளின் இந்த செயலால் பாதிக்க படபோவது இலங்கையில் வாழும் தமிழ் மக்களே என்பதை ஏன் புரியாமல் இருகின்றனர்