November 25, 2020

இந்தியாவின் கோயபல்ஸ் அர்னாப் கோஸ்வாமி கைது! மீட்டப்பட வேண்டிய சில நினைவுகள்ஹிட்லரின் நாஜி கட்சியின் செயலாளராக இருந்த கோயபல்ஸ் பார்க்கும் போதே பச்சை பொய் எனத் தெரியும் செய்திகளை திரும்ப திரும்ப சொல்லி அதனை உண்மை போல் காட்ட முயன்றவர் என கூறப்படுகிறார்.

பொய்யை மீண்டும் மீண்டும் கவர்ச்சியாக கூறி மக்களை நம்ம வைக்க முயலும் இந்தியாவின் கோயபல்ஸாக அறியப்பட்டவர் தான் அர்னாப் கோஸ்வாமி.

இந்திய தொலைக்காட்சி விவாதங்களின் அடையாளமாக பார்க்கப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி - ரிபப்லிக் TV யின் முக்கியஸ்தர்.

இந்திய ஆங்கில மொழி தொலைக்காட்சி விவாதங்களில் அர்னாபின் விவாதம் சற்று வித்தியாசமானது.

எதிரில் இருப்பவர் யார்? அவருடைய நற்பெயர் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் துளியும் யோசிக்காதவர் அர்னாப். எதிர்தரப்பில் இருப்பவரை கேள்வி கேட்க்க வேண்டும் என்பதை தாண்டி இவரே வாதம் செய்வார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாபின் விவாதங்கள் மிகப் பிரபலம்.

இவரை தொடர்ந்து தான் தமிழக தொலைக்காட்சிகளும் விவாத நிகழ்ச்சிகளை சூடாக்கின அல்லது திட்டமிட்ட கருத்தொன்றை உருவாக்கும் ஓர் இடமாக விவாத நிகழ்ச்சிகளை உண்டாக்கிக் கொண்டன என்பதே யதார்த்தம்.

அந்த வகையில் தமிழக தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே அர்னாபைத் தான் முழுவதும் பின் தொடர்ந்தார் என்றே சொல்லலாம். அதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் தமிழுக்கு ஓர் அர்னாப் என்று பாண்டேவை சொல்லலாம்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அர்னாபை சுற்றியே இந்திய தொலைக்காட்சி செய்திகள் சுழன்று கொண்டிருந்தன. அதற்கு இரண்டு காரணம் ஒன்று தொலைக்காட்சிகளின் TRP ரேட்டிங்கை திருட்டுத் தனமாக தனது ரிபப்லிக் தொலைக்காட்சிக்கு அர்னாப் பெற்றுக் கொள்கிறார் என்பது இரண்டாவது ஒரு பொறியாளரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டு.

அர்னாப் கோஸ்வாமி பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை அலிபாக் போலிசாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். - இது அர்னாப் மட்டுமல்ல அவர் ஆதரவாளர்களோ ஆளும் அரசோ கூட எதிர்பார்க்காத ஒன்று தான்.

அர்னாபை கைது செய்வதும் மோடியை கைது செய்வதும் ஒரு விதத்தில் சமனானதாக பார்க்கப்படும் ஏனென்றால் இந்திய ஆளும் பா.ஜ.க அரசின் முழு ஊடக முகமாக இருப்பதே அர்னாப் தான். அப்படியான ஒருவரை இன்று பொலிஸ் கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு அப்பால் அர்னாப் மீது கைது நடவடிக்கைக்கு செல்ல இந்திய பொலிசுக்கு தைரியம் வந்ததற்கே பாராட்டலாம்.

இந்நேரத்தில் அர்னாப் பற்றி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தற்போது இந்தியாவை விட்டும் வெளியேறி மலேஷியாவில் தஞ்சமடைந்திருப்பதற்கும் பிரபல ஆங்கில மொழி இஸ்லாமிய பிரச்சாரகர் Dr ஸாக்கீர் நாயக்கின் Peace TV மற்றும் அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டமைக்கும் அர்னாபுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது.

ஆங்கில மொழியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வம்பிலுத்து முஸ்லிம்களை அர்னாப் கொச்சைப்படுத்த நினைக்கும் போதெல்லாம் அவருக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் Dr ஸாக்கீர் நாயக்.

அர்னாப் பல விவாத நிகழ்ச்சிகளை நடத்தி கட்டமைத்து வரும் ஒரு பொய்யை அசால்ட்டாக அடித்து நொருக்கி விடும் நிலையில் ஆங்கில மொழியில் Dr ஸாக்கீர் நாயக் செயல்பட்டார்.

மும்பையில் Dr ஸாக்கீர் நாயக் நடத்தும் இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவதும் அது பீஸ் - Peace TV யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதும் உலகம் முழுவதும் Peace TV க்கு பார்வையாளர்கள் அதிகரித்ததும் அர்னாபினால் மட்டுமல்ல ஆளும் மோடி அரசினாலும் பொருக்க முடியாமல் போனது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் போன்றவர்கள் Dr ஸாக்கீர் நாயக் உடன் விவாதத்திற்கு வருகிறேன் பேர்வழி எனக்கூறி விவாதத்தில் “குழந்தாய், குழந்தாய்” போட்டதும் அர்னாப் போன்றவர்களினால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக கசத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தான் Dr ஸாக்கீர் நாயக் உள்ளிட்ட IRF இன் முழு இஸ்லாமிய செயல்பாடுகளையும் முடக்க வேண்டும் குறிப்பாக Peace Tv க்கு சங்கு ஊதவேண்டும் என்ற முடிவில் பலர் களமிறக்கப்பட்டனர்.

Dr ஸாக்கீர் நாயக் நாட்டில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீதான money laundering குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், Dr ஸாக்கீர் நாயக்கின் வீடியோக்களில் பயங்கரவாதத்தை தூண்டுகின்றார் என்ற போலிக் குற்றச்சாட்டுக்களும் ஜோடிக்கப்பட்டன.

Dr ஸாக்கீர் நாயக் தலைமை தாங்கிய IRF நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டன Peace TV க்கு தடை கொண்டுவரப்பட்டது (வெளிநாட்டிலிருந்து பீஸ் தொலைக்காட்சி இயக்கப்படுகின்றது)

Dr ஸாக்கீர் நாயக் அவர்களின் வீடியோக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நேரத்தில் Dr ஸாக்கீர் நாயக்கின் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை எப்படியாவது உண்மைப்படுத்த வேண்டும், ஆங்கில உலகிலும் மேற்குலகிலும் Dr ஸாக்கீர் நாயக்கை பயங்கரவாதியாக சித்தரித்தால் அவருடைய உரைகளை மக்கள் கேட்க்க மாட்டார்கள் என்ற பழைய புராண ஐடியாக்களை கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பணியை “வாங்கிய சம்பளத்திற்கு மேலயும் கூவிக் கூவி” செய்தவர் தான் அர்னாப் கோஸ்வாமி.

Dr ஸாக்கீர் நாயக் மூலம் மக்களுக்கு இஸ்லாத்தின் செய்திகள் சென்று விடக் கூடாது என்று நினைத்தார் அர்னாப். பீஸ் டிவி தடுக்கப்பட்டால் அனைத்தும் ஓய்ந்தது என்று நினைத்தார்.

ஆனால் Dr ஸாக்கீர் நாயக்கின் பிரச்சாரமோ தொலைக்காட்சிகளை தாண்டி இன்று சமூக வலைதளங்கள் வரை இறைவனின் அருளினால் மக்களை சிறப்பாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. (Dr ஸாக்கீர் நாயக்கின் சில மார்க்க கருத்துக்களில் எமக்கு மாற்றுக் கருத்துண்டு என்பது தனி விவகாரம்)

பல பொய்களை கூறி குற்றவாளிகளை காப்பாற்ற தனது ஊடக பலத்தை பயன்படுத்திய கோஸ்வாமியை காப்பாற்ற எந்த ஊடக ஜாம்பவான் முன்வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோயபல்ஸை காப்பாற்ற வரலாற்றில் ஹிட்லர் இருந்தார் என்றால் கோஸ்வாமிக்கு மோடியும், அமித்ஷாவும் இருப்பார்கள்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக!

[அல்குர்ஆன் 17:81]


•ரஸ்மின் MISc

No comments: