November 25, 2020

ட்ரம்பின் தோல்விக்கு காரணமான இஸ்லாமிய வெறுப்பும், கருப்பின எதிர்ப்பும்.

பைடனுக்கு உதவிய முஸ்லிம்களின் 70% வாக்குகள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னால் அதிபர் ட்ரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் புது ஜனாதிபதியாக பதவியேற்க்கவுள்ளார் ஜோ பைடன்.

அமெரிக்காவின் கடந்த 30 வருட தேர்தல் வரலாற்றில் பதவியில் இருந்த ஓர் அதிபர் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க வரலாற்றில் ஒபாமா ஜனாதிபதியாக தேர்வானதற்கு பின்னர் அதிக மக்களின் சந்தோஷம் ஜோ பைடனின் தெரிவுக்காகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒபாமாவுடன் ஒப்பிடுகையில் வயதில் மூத்தவர் ஜோ பைடன். ஆனால் ஒபாமா அளவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பேச்சில் வசீகரம் கொண்டவராக பார்க்கப்பட வில்லை. ஆனாலும் தான் வைத்த வாதங்களை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தர்க்க ரீதியாக ஆதாரத்துடன் முன்வைத்தார்.

அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவு, வடகொரிய அமெரிக்க முறுகல், சீனாவுடனான உள்ளக மோதல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தாத சிறுபிள்ளைத் தனம், WHO வை பகைத்துக் கொண்ட முட்டால் தனம். என உலகளவில் ட்ரம்ப் ஏற்படுத்திய தேவையற்ற பல பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தி சிந்திக்க தூண்டினார்.

பெரும்பான்மை மக்கள் பொதுவான பிரச்சினைகளை பற்றிய ஜோ பைடனின் கருத்துக்களினால் கவரப்பட்டாலும் அமெரிக்க வாழ் முஸ்லிம்களும், கருப்பின சகோதரர்களும் ஜோ பைடனை ஆதரிக்க தனிக் காரணம் இருந்தது.

அமெரிக்க வாழ் முஸ்லிம்களில் 70 சதவீதமானவர்கள் இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடனையே ஆதரித்துள்ளதாக அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ட்ரம்பின் சிறுபான்மை வெருப்பு அரசியலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அமெரிக்காவிலும், அமெரிக்காவுக்கு வெளியிலும் ட்ரம்ப் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் காட்டிய வெறுப்பு அரசியல் அவருக்கு பாடம் புகட்டியுள்ளது.

சிறுபான்மை மக்களை நசுக்குவதின் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறலாம் என்ற இத்துப் போன ஐடியாவையே தொடர்ந்தும் கடைப்பிடித்தார் ட்ரம்ப். தனது முதல் வெற்றி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் என்பதால் அதனை தன் ஆட்சிக் காலத்திலும் நடைமுறைப் படுத்தினார்.

இஸ்லாமிய, முஸ்லிம் வெறுப்புடன் கருப்பின சகோதரர்கள் மீதான வெறுப்புனர்வையும் தொடர்ந்து விதைத்து வந்தார் ட்ரம்ப். கருப்பின சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் கட்டுக்கடங்காமல் சென்றது.

ட்ரம்பின் இந்த செயல்பாடுகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை தரவுமில்லை. சிறுபான்மை மக்கள் மத்தியில் வெறுப்பை தான் உண்டாக்கியது.

இந்தக் காரணங்கள் தான் அவரை இத்தனை தூரம் பின்னடைவை சந்திக்க வைத்துள்ளது.

இதே போல் இன்னொன்றும் ட்ரம்பின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

அதாவது உலகின் மிகப் பெரும் வல்லரசின் அதிபராக பதவியில் அமர்ந்த ட்ரம்ப் செய்த காரியங்கள் எல்லாமே விளையாட்டுப் பிள்ளையின் செயல்பாடுகளாகவே அமைந்திருந்தது. கண்டவரும் முகம் சுளிக்கும் வகையிலான செயல்பாடுகளையே தன்னளவில் முன்னெடுத்து இறுதியில் தோல்வியில் முகம் குப்புற விழுந்தார்.

பொதுவாகவே ட்ரம்ப் உள்ளிட்ட அவருடைய கால ஆட்சியில் இருந்த சிலரின் நிலை இப்படித் தான் இருந்திருக்கிறது.

•அமெரிக்க அதிபர் டர்ம்ப்
•இந்தியப் பிரதமர் மோடி
•இலங்கை ஜனாதிபதி மைத்திரி

இப்படி ட்ரம்பின் சமகாலத்தவர்களான சில ஆட்சியாளர்களை பொது மக்கள் தம்மை ஆளும் ஆட்சியாளர்களாக பார்த்தார்களோ இல்லையோ பொழுது போக்கும் காமடியர்களாக பார்த்தார்கள்.

மீம் க்ரியேட்டர்கள் தமக்கு வாய்த்த கண்டென்ட்டுகளாக பார்த்தார்கள்.

ஆட்சியெனும் மிகப் பெரும் அதிகார பீடத்தின் பெருமதி அறியாத இவர்களுக்கு மக்கள் புகட்டும் பாடத்தின் அடுத்த கட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பார் என்பதே யதார்த்தம்.

அமெரிக்காவில் தற்போதைக்கு ஆட்சியாளரின் முகம் மாறியிருக்கிறது அவ்வளவுதான் அவர்களின் ஒட்டுமொத்த கொள்கைளும் மாறிவிட்டது என இதில் அர்த்தப்படாது.

ஜோ பைடன் எப்படியிருக்கப் போகிறார் என்பது இனிமேல் தான் தெரியும். அவரும் இன்னொரு ட்ரம்ப்பாக, ஒபாமாவாக, புஷ்ஷாக இருக்கப் போகிறாரா? அல்லது சிறுபான்மை மக்களின் உரிமை காத்து முஸ்லிம் நாடுகள் மீதான அநியாயத் தாக்குதல்களை நிறுத்தி ஓரளவுக்காவது மக்கள் மதிக்கும் தலைவராக இருக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்''

அல்குர்ஆன் 2:247

•MFM ரஸ்மின் MISc

No comments: