புர்கா தடை விடயம் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்ததை அடுத்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்ததாக ரஸ்மின் குறிப்பிடுகின்றார்.
புர்கா அணிவது தமது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என கூறும் ரஸ்மின், புர்காவிற்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பதை ஒரு இஸ்லாமிய சமூகமாக தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறுகிறார்.
முகத்திரை அணிவது என்பது நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மாத்திரம் உள்ள சட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தாம் விழிப்புணர்வின் ஊடாக மக்களிடையே தெளிவூட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், அரசாங்கம் இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவதை தாம் ஆதரிக்க முயற்சிக்கும் போது, நாளை மேலும் பல்வேறு விடயங்களுக்கு தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ரஸ்மின் கூறுகிறார்.
BBC செய்தி:
https://www.bbc.com/tamil/sri-lanka-56480282
புர்கா தடை பற்றிய CTJ நிலைபாடு வீடியோ :
No comments:
Post a Comment