April 5, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் - மதச்சார்பற்ற திமுக கூட்டணி வெற்றிபெறுவது காலத்தின் கட்டாயம்; ஏன்?


 
இன்ஷா அல்லாஹ் நாளை ஏப்ரல் 06ம் திகதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்ட மன்றத்திற்க்கான தேர்தல் கடந்த காலங்களை விட இம்முறை பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மு. கருணாநிதி, ஜெ. ஜெயலளிதா என்ற இரண்டு துருவங்கள் இல்லாத தேர்தல் இது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பெயரளவு அதிமுக ஆட்சியும் உண்மையான பஜக ஆட்சியும் நீட்சியை நோக்கி நகரும் தருணத்தில் வரும் தேர்தல் இது.

குறிப்பாக அதிமுக, மோடியின் பஜக, ராமதாசின் பாமக கட்டிகளின் பாசித மனிதகுல விரோத கூட்டணி ஒரு பக்கமும்,

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, கம்பியூனிஸ்டுகள், முஸ்லிம் சமுதாய கட்சிகளான தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மற்றும் தோழர் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணி மறுபக்கமும்,

சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் என ஏகப்பட்ட உதிரிக் கட்சிகளும் இன்னும் பெயர்களை எழுதி முடிக்க முடியாதளவுக்குண்டான கட்சிகளும் இம்முறை தமிழக சட்ட சபை தேர்தலில் களம் கண்டு பிரச்சாரத்தையும் முடித்து விட்டன.

இந்தத் தேர்தல் தமிழகத்துடன் சேர்த்து இன்னும் சில மாநிலங்களுக்கான மாநில தேர்தலாக நடைபெற்றாலும் தமிழக தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக
மாட்டுக்காக மனிதனை கொல்வதையும்,
பெண்களை கற்பழிப்பதையும்,
மதத் தளங்களை அபகரிப்பதையும்,
மதத்தின் பெயரால் கலவரங்களை தூண்டுவதையும்,
ஜாதியின் பெயரால் சமூகங்களை பிளவுபடுத்துவதையும்,
ஆட்சிக்காக எந்த அநியாயத்தையும் செய்வதும், ஆதரிப்பதும் தான் நம் கடமை என அத்தனை அநியாயங்களுக்கும் துணை நிற்க்கும் உலக மகா கொடுங்கோலன், மனிதகுல விரோதி நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி சார்ந்த மொத்த மனித குல விரோதிகளும் ஒரு பக்கமும்,

மனித நேய விரும்பிகளும், ஜனநாயகவாதிகளும் மறுபக்கமுமாக அமைந்துள்ள காரணத்தினால் தான் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இம்முறை திமுக கூட்டணியில் மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. மமக சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் ப. அப்துஸ் சமத் ஆகியோர் திமுக வின் உதய சூரியர் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களில் முஸ்லிம் வேட்பாளராக நண்பர் ஆளுர் ஷாநவாஸ் போட்டியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் தம் கட்சி சார்பில் பானை சின்னத்தில், தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் தவிர்த்து முஸ்லிம் லீக் சார்பிலும் திமுக கூட்டணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவற்றில் மமக வின் வேட்பாளர்கள் இருவரை பொருத்த வரையில் திமுக வின் உதய சூரியன் சின்னத்திலேயே இவர்களும் போட்டியிடுவதால் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனால் திமுக வின் உறுப்பினர்களைப் போல் திமுகவுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர்களாக இவர்கள் இருவரும் செயல்பட வேண்டி வரும்.

ஆனால், ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் திமுக தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற வாய்ப்புள்ள காரணத்தினால் அப்படி தனிப்பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்றால் மமக வின் இரு வேட்பாளர்களும் வெற்றிபெரும் பட்சத்தில் சட்ட சபையில் தனித்தும் செயல்படும் வாய்ப்புண்டு.

எப்படிப் போனாலும் மோடியின் பஜக என்ற மனித குல விரோதிக்கும் அதிமுக என்ற மனித குல எதிரிக்கும் எதிராக திமுக, மமக கூட்டணியின் இந்த இரு வேட்பாளர்களும் நண்பர் ஷாநவாஸ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்களும் வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

மொத்தத்தில் இம்முறை திமுக கூட்டணி வெற்றிபெறுவது மனித நேயம் பாதுகாக்கப்பட வழியாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழகத்தை இன்னொரு உத்தர பிரதேசமாக மாற்றி பச்சை பிள்ளை ஆசிபாவை கற்பழித்துக் கொலை செய்தது போல் தமிழகத்திலும் நடக்காமலிருக்க தமிழக மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது கட்டாய தேவையாக மாறியுள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் கடந்த ஐந்து வருட ஆட்சியின் போது சட்ட சபையில் ஆளும், எதிர் கட்சிகளில் இருக்க வில்லை. இருப்பினும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய முஸ்லிம்களுக்காகவும் இவர்கள் ஓங்கி குரல் எழுப்பியதுடன், இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு அநியாயத்திற்கு எதிராக இலங்கைக்கு வெளியில் ஆரம்பமாகவே குரல் எழுப்பியவர்கள் தமுமுக வின் மமக வினர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

ஜனாஸா அடக்கத்திற்கு வலியுறுத்தி, எரிப்பை நிறுத்துமாறு கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் அதே நாட்களில் ஆர்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள். என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

தம் நாட்டுக்குள்ளும் வெளிநாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்காகவும் குரல் எழுப்பிய சகோதரர்கள் உள்ளிட்ட ஜனநாயக நேசம் கொண்ட மதச்சார்பற்ற திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்வது காலத்தின் கட்டாயம் என்பது என் பார்வை.

தமிழக முஸ்லிம் அரசியல் சார்பற்ற இயக்கங்கள் பலவும் திமுக கூட்டணியை ஆதரித்துள்ளன. சகோதரர் அல்தாபி தலைமையிலான ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் போன்ற அமைப்புகள் இம்முறை இக்கூட்டணி வெற்றிக்காக களம் இறங்கி தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள்.

அந்தளவுக்கு இந்தத் தேர்தல் மோடி மஸ்தான்களை விரட்டியடிக்க வேண்டிய சமூக நலன்சார் தேர்தலாக மாறியுள்ளது.

ஆட்சியை வழங்குபவனும், பரிப்பவனும் ஏக இறைவன் மாத்திரமே. நாளை தேர்தல் வாக்களிப்பின் பின் இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நடக்கும்.
 
தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
 
அல்குர்ஆன் 2:247
 
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!
 
அல்குர்ஆன் 3:26  

No comments: