June 4, 2021

குஜராத், காஷ்மீரை தொடர்ந்து லட்சத்தீவு முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கும் இந்திய – மோடி அரசு.


 

இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமையப்பெற்று இத்தனை ஆண்டுகளில் இனவாதத்தையும், மதவாதத்தையும் மாத்திரம் அடிப்படையாக வைத்தே அவர்களின் ஆட்சி தொடர்கிறது என்பது உலகறிந்த விஷயம்.

 

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் தொடர்ந்தும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையே கட்டவிழ்த்து வருகிறார்கள்.

 

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டி அல்லது முஸ்லிம்கள் மீதான பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கியே பல நாடுகள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கின்றன.

 

உய்க்குர் முஸ்லிம்களை சித்தரவதை செய்தும், தனிமைப்படுத்தப்பட்ட வதை முகாம்களில் வைத்து அநியாயம் செய்தும் அவர்களை பெரும் குற்றவாளிகளாகவும் சீன மக்களுக்கு எதிரிகளாகவும் சித்தரித்து சீனா தனது ஆட்சியை தொடர்கிறது.

 

ரோஹிங்யா முஸ்லிம்களை நாட்டுக்கு எதிரானவர்களாகவும், நாட்டின் துரோகிகளாகவும் சித்தரித்து சொல்ல முடியாத அளவு துன்பங்களை அவர்களுக்கு வழங்கி அதனை வைத்து அரசியல் நடத்திக் கொண்டு மியன்மாரின் ஆட்சிகள் கடக்கின்றன.

 

ரஷ்யாவுக்கு ஒரு செச்னியா, இஸ்ரேலுக்கு பலஸ்தீனம் என உலக நாடுகளின் பல அப்பாவி முஸ்லிம்களை வதை செய்தே தம் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

 

அந்த வகையில் தான் இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உண்டாக்கியே தம் ஆட்சியை கொண்டு செல்கிறார்கள்.

 

எந்தத் தேர்தல் வந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமே அவர்களின் தேர்தல் வியூகமாக அமைத்துக்கொள்ளப்படுகிறது.

 

இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் மாட்டுக் கரி வைத்திருந்தார்கள் எனக் கூறி மாட்டுக்காக முஸ்லிம்களை கொலை செய்ததும் அதனை சரி கண்டு பேசியதும் உலகமே காரித்துப்பிய ஜனநாயகமாகும்.

 

சிறுமி ஆசிபா கொலை செய்யப்பட்டதும் அதற்கு ஆதரவாக மோடியின் அமைச்சர்கள் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை கருத்து வெளியிட்டதும் கூட மனித நேயத்தை கொலை செய்த காரியங்கள் தான்.

 

இப்படி இந்தியா முழுவதும் முஸ்லிம்களை வைத்தே தமது காரியங்களை கச்சிதமாக முன்னெடுத்து செல்கிறது இந்திய மோடி அரசு.

 

தனி சுயாட்சிப் பகுதியாக இருந்த காஷ்மீரை பலவந்தமாக இந்தியாவுடன் இணைத்து காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை பரித்து இன்று வரை அங்கு இந்திய இராணுவத்தை நிலைப்படுத்தி வைத்து அங்குள்ள முஸ்லிம்களை சொல்லொனாத் துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகிறது மோடி அரசு.

 

அதே பாணியில் தான் தற்போது முஸ்லிம்களின் நிறைந்து வாழும் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும் இந்தியாவின் லட்சத்தீவுகளையும் கொல்லையடித்து, அங்கு வாழும் முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கிறது இந்திய அரசு.

 

லட்சத்தீவுகள் ஓர் அறிமுகம்.

 

இந்தியாவின் பகுதியாக அறியப்பட்டாலும் லட்சத்தீவு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் இருந்து வந்துள்ளது. பின்னர் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லட்சத்தீவுகளில் பல நூறு தீவுக்கூட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் தற்போது மொத்தமாக அங்கு இருப்பது 36 தீவுகள் மாத்திரம் தான்.

 

லட்சத் தீவுகளின் தலைநகரமாக கவுரத்தில் அறியப்படுகிறது. இங்கு மலையாளம், ஆங்கிலம், திவேஹி, ஜெஸரி ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

 

தீவுக்கூட்டங்களை கொண்ட பகுதி என்பதால் விமானம் மற்றும் கடல் மார்க்கமான மாத்திரமே இங்கு செல்ல முடியும்.

 

லட்சத்தீவுகளில் மொத்தமாகவே 65 ஆயிரம் மக்கள் மாத்திரமே வாழ்கிறார்கள். இந்த 65 ஆயிரம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் முழு மக்கள் தொகையில் 96.58 சதவீதத்தினர் முஸ்லிம்களாகவும், 2.77 சதவீதத்தினர் இந்துக்களாகவும் இருக்கும் அதே வேலை 0.49 சதவீதம் கிருஸ்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.

 

லட்சத்தீவுகளுக்கு என்று தனியான சட்டமன்றமோ ஆட்சி மன்றமோ கிடையாது. ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்.

 

இந்திய மத்திய அரசினால் நியமிக்கப்படும் நிர்வாகி ஒருவர் தான் இதன் ஆட்சியாளராக அறியப்படுவார்.

 

இதுவரை காலமும் இந்தப் பிரதேசத்திற்கு IAS அல்லது IPS அதிகாரிகளே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால் முதல் முறையாக தற்போது லட்சத்தீவுகளுக்கான நிர்வாகியாக ஒரு அரசியல்வாதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் பிரபுல் கோடா பட்டேல் என்பவராவார்.

 

 

குஜராத்தின் முதல்வராக இன்றைய இந்தியப் பிரதமர் மோடி செயல்பட்ட நேரத்தில் பிரபுல் கோடா பட்டேல் 2010ம் ஆண்டில் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டார்.

 

பின்னன் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தல்களில் தோல்வியை தழுவிய பிரபுல் கோடா பட்டேலை லட்சத்தீவுகள் போன்ற சில பகுதிகளுக்கு நிர்வாகியாக நியமித்தது மோடி அரசு. அதன் தொடரில் தான் தற்போது லட்சத்தீவுகளுக்கும் நிர்வாகியாக கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இவர் நியமிக்கப்பட்டார்.

 


சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி வாழும் லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் வாழ்க்கை பயணத்தையும் திசை திருப்பும் வகையில் இவருடைய வருகை அமைந்துள்ளது.

 

குஜராத்தில் முஸ்லிம்களை கறுவறுத்த மோடி அரசு, அதே பாணியில் சட்டத்தின் மூலம் காஷ்மீரில் முஸ்லிம்களை உரிமைகளைப் பரித்தது. அதன் தொடரில் தற்போது லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பரித்து நடுத்தெருவில் விடும் வேலையில் மிக வேகமாக களமிறங்கியுள்ளது.

 

இதுவரை காலமும் லட்சத்தீவுகளில் அங்கு வாழும் மக்களைத் தவிர வேறு யாரும் இடங்களை வாங்கவோ விற்க்கவோ முடியாது. ஆனால் தற்போது அந்தத் சட்டத்தை மாற்றி அங்கு யார் வேண்டுமானாலும் இடத்தை வாங்களாம் விற்க்கலாம் என்று பிரபுல் கோடாவை வைத்து சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது இந்திய மோடி அரசு.

 

சுற்றுலாத்துறையை நம்பி வாழும் லட்டத்தீவு மக்களின் வாழ்வில் பெருத்த இடியாக வீழ்ந்துள்ளது இந்த அறிவிப்பு.

 

லட்சத்தீவுகளின் பெரும்பான்மையாக வாழ்வோர் முஸ்லிம்கள் என்ற வகையில் அங்குள்ளவர்களின் பிரதான உணவாக மாட்டிரைச்சி இருக்கிறது. தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம் லட்சத்தீவுகளில் மாட்டிரைச்சி உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் இதுவரை காலம் அங்கு அனுமதிக்கப்படாமல் இருந்த சாராயத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

நாட்டை நாசமாக்கும் சாராயத்திற்கு அனுமதி வழங்கி மக்களின் பிரதான உணவாக இருக்கும் மாட்டிரைச்சிக்கு தடை விதித்து முஸ்லிம்களின் உண்ணும் உரிமையில் கைவைத்தது மாத்திரமன்றி மாபெரும் கலாசார சீரழிவுக்கும் வழியேற்படுத்தியுள்ளது மோடியின் இந்த புதிய சட்டத்திருத்தம்.

 

இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 2019ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி லட்சத்தீவுகளில் ஒரேயொரு கொலை அல்லது கொள்ளை வழக்குக் கூட பதிவு செய்யப்படவில்லை என்கிறது லட்சத்தீவு தொடர்பான தரவுகள்.

 

இந்த நிலையில் லட்சத்தீவுகளில் குண்டர் தடுப்புச் சட்டத்தை, புதிய சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவந்துள்ளது மோடி அரசாங்கம்.

 

எந்தவிதமான குற்றமும் நடைபெறாத ஒரு பிரதேசத்தில் ஏன் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என அங்குள்ள மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

 

பொதுவாக முஸ்லிம்கள் அதிக குழந்தை பெருவதில் ஆர்வம் கொண்டவர்கள். இஸ்லாமும் அதனை வரவேற்கிறது. குறிப்பாக குழந்தை என்பதே இறைவனின் மிகப்பெரும் அருளாகும். குழந்தையில்லாமல் வாழ்நாள் முழுவதும் கண்ணீருடன் வாழும் குடும்பங்களுக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும் என்பார்கள். இஸ்லாம் குடும்ப வாழ்வை மிக சீரான வழிகாட்டல்களுடன் முன்மொழிந்துள்ளதினால் முஸ்லிம்கள் குடும்ப வாழ்வில் பின்னிப் பினைந்தவர்களாக இருக்கிறார்கள்.

 

லட்சத்தீவுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடி அரசாங்கம்  கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தில் இன்னுமொரு முக்கியமான திருத்தம் என்னவென்றால் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் எவறும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்கும் மிகப்பெரும் சூழ்ச்சியை அரங்கேற்ற முயல்வதுடன் உள்ளாட்சி மன்ற பஞ்சாயத்து பொறுப்புகளிலிருந்து பெரும்பான்மையான முஸ்லிம்களை ஓரங்கட்டும் திட்டத்தையும் மோடி அரசு நுழைவிக்கிறது.

 

மோடியின் அரசினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக பிரபுல் கோடா பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாக லட்சத்தீவுகளில் எவ்விதமான கொரோனா தாக்கங்களும் இருக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கிய கொரோனா முதல் அலையின் போது இங்கு எந்தவொரு கொரோனா நோயாளியும் கண்டறியப்படவில்லை.

 

ஆனால், நிர்வாகப் பொறுப்பை கையில் எடுத்த ஒரு சில வாரங்களிலேயே அங்குள்ள கொரோனா விதிகளை தளர்தினார் மோடியின் நிர்வாக பிரபுல் கோடா. இதனால் கொரோனா தொற்று வேகமாக லட்சத்தீவுகளில் பரவ ஆரம்பித்தது. தற்போது வரை சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

முஸ்லிம்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் நிம்மதியை கெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து அதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இனவாதமும் மதவாதமும் பேசி வரும் இந்திய மத்திய அரசின் மோடி வகையராக்களின் லட்சத்தீவுகள் அபகரிப்பு தொடர்பில் ஜனநாயவாதிகள் பலரும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

 


கேரளாவின் ஆளும் அரசு சார்பில் லட்சத்தீவுகளுக்கு நியமிக்கப்பட்ட மோடியில் நிர்வாகி பிரபுல் கோடாவை அப்பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என கேரள முதல்வர் சட்ட சபையில் தீர்மானமொன்றையும் கொண்டு வந்துள்ளார்.

 

இதே வேலை லட்சத்தீவுகளில் இருக்கும் தென்னை மரங்களுக்குக் கூட மோடி அரசு காவி நிரம் பூசியுள்ளதாகவும் லட்சத்தீவுகளையும் காவி மயமாக்கும் ஒரு திட்டம் தான் இதுவென்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

லட்சத்தீவுகளின் ஜனநாயகம் காக்கப்பட்டு, அங்கு வாழும் மக்கள் இதுவரை காலமும் வாழ்ந்ததை போல் எவ்வித சங்கடங்களும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே நல்லுள்ளம் கொண்ட அனைவரினதும் பிராத்தனையும் விருப்பமுமாகும்.

 

ஜனநாயகம் வெற்றியடையும் போது இனவாதம் தோற்று மண்ணைக் கவ்வும் என்பதில் சந்தேகமில்லை.

No comments: